வீணாய்ப் போன கல்வி
பொதுவாகவே ஆசிரியர் என்றால் ஒரு மிக உயர்ந்த பணியாக கருதப்பட்ட காலம் இருந்தது. ஆசிரியரை கண்டால் ஒரு பயம், மரியாதை மற்றும் ஒரு பணிவும் இருந்தது. ஆனால் அந்த நிலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் ஆசிரியர் எங்கு இருந்தாரோ அங்கே சென்று தான் மாணவர்கள் தங்கள் கல்வியை கற்றனர். இன்றோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி ஓடும் நிலைக்கு வந்துள்ளனர். ஆசிரியர் என்பவர் மிக உயர்ந்த சமுதாய நிலையில் இருந்த காலம் போய், யார் வேண்டுமானாலும் ஆசிரியராக வரலாம் என்ற நிலை வந்துள்ளது. குரு என்றால் இருளை விளக்குபவர் என்று பொருள். கு என்றால் இருள், ரு என்றால் அகற்றுதல் என்று பொருள். இன்று பல குருக்கள் (ஆசிரியர்கள்) தெளிவான மாணவர்களையும் இருள் நிலைக்கு இட்டுச்செல்கின்றனர். ஒருவன் எப்படி இயற்கையோடு இணைந்து தன் வாழ்வையும் தன்னோடுள்ள உயிர்களின் வாழ்வையும் மேம்படுத்துவது என்பதே உண்மையான கல்வி. ஆனால் இன்று எந்தக் கல்வியும் இயற்க்கைக்கு முக்கியம் கொடுப்பதோ அல்லது இயற்கை சார்ந்தோ இல்லை. கல்வி என்பது பொருளாதாரத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது போய், பொரு...