Posts

Showing posts from April, 2020

ஆடு கோழி விலை உயர்வு ஓர் அலசல்

Image
கடந்த இரண்டு வருடங்களாகவே ஆடு மற்றும் கோழி விலை மற்றும் அதன் கறி விலை சற்று வேகமாக உயர்ந்து வருகிறது. வணிகவியல் பேராசிரியர் என்ற முறையில் இதை இரண்டு கோணங்களில் நான் பார்க்கிறேன்.  ஒன்று இதன் தேவை அதிகமாகிவிட்டது. இரண்டு வளர்ப்பு குறைந்து வருகிறது. இன்று மக்களின் உணவில் அசைவம் என்பது தவிர்க்க முடியாத இடத்தில இருப்பதாகவே நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் கோவிலுக்கு அதிகமாக போகவில்லை என்றாலும்,  நாள் கிழமை பக்தி என்று வாழ்ந்துவந்தனர். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, அமாவசை, கிருத்திகை என்று கடைப்பிடித்து அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர்.  அந்த நாட்களில் அசைவ உணவினை உட்கொண்டால் பெரிய தெய்வ குற்றம் நடந்து விடும் என்ற பயமும் பக்தியும் இருந்தது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வாழ்க்கைமுறை மற்றும் மேற்கத்திய கலாச்சார மோகம் என்பது அதீத அளவில் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை மாற்றியுள்ளது. ஆடு, மாடு, கோழி போன்றவை குடும்பத்தில் ஒரு நபராகப் பார்க்கப்பட்ட காலம் போய் அவை உணவாகவும் பணமாகும் பொர...

காணாமல் போகுமா விவசாயம்?

Image
இந்தகொரோனா நேரத்தில் இந்த தலைப்பைப் பற்றி எழுதுவது மிகவும் சரியானதாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் நமக்கு போதுமானது வெறும் உணவு மட்டுமே. எந்நேரத்திலும் தொற்று வரலாம், உயிர் போகலாம் என எண்ணி அரசே நம்மை வீட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கி நிற்க, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது விவசாயம் தான். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மானுட வாழ்க்கை முறையை விட இன்றைய வாழ்க்கை பல்வேறு கோணங்களில் மாறுபட்டுள்ளது. பல விளை நிலங்கள் கட்டடங்கள் மற்றும் கட்டிட நிலங்களாகவும் கூறு போடப்பட்டுள்ளது.  நீர் இல்லாமைக்கு காரணம் மரம் வளர்ப்பு இல்லாமை என்று சொல்லியே நம்மை நாம் ஆற்றுப்படுத்துகிறோம். பொதுக்கிணறு, பொது ஆழ்துழை இயக்குவிசைக் குழாய், குளம்  போன்ற நீர்நிலைகளை குறைவாகப்  பயன்படுத்தி வந்தநாம், இன்று வீடு தோறும் ஆள்துளைக் கிணறுகள் அமைத்து அதில் தண்ணீரை உறிஞ்சிவிடுகிறோம். தண்ணீர் இல்லாமல் வாழமுடியுமா என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் தோன்றுவது புரிகிறது. ஆனால் அதிகமான கட்டுபாடுகள் இல்லாததாலும் பேராசை மிகுந்த எண்ணத்தாலும் நிலத்தைத் துளையிட்டு ...