Posts

Showing posts from May, 2020

நஞ்சுண்ணும் பிள்ளைகள்

Image
என்னப்பா நஞ்சுண்ணும் பிள்ளைகள்னு தலைப்பு வச்சிருக்க. உன்பேரு நஞ்சப்பானு இருப்பதாலயா? என்று பலரது எண்ணத்தில் தோன்றும். இதோ விளக்கம் தருவதற்கு முன் எனது பெயர் பற்றி சொல்றேன் கேளுங்க. நஞ்சப்பா-நஞ்சு+அப்பா. நஞ்சு-விஷம், அப்பா-தொற்றாத. அதாவது விஷம் தொற்றாதவன் நான் என்று பொருள். சரி சரி கோவப்படாதீங்க. தலைப்புக்கு வருகிறேன். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஈஷாயோகா மையம் நடத்திய இயற்கை விவசாயத்தின் நுழைவு வாயில் என்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். எனக்கு சிறு வயது முதலே விவசாயம் செய்வதிலும் கால்நடைகள் வளர்ப்பிலும் அதீத ஆர்வமே இந்த நிகழ்வின் ஈர்ப்புக்கு காரணம். ஒரு நாள் பயிற்சி. 20 விதமான இடுபொருட்களை செலவில்லாமல் தயாரிப்பது எப்படி என்று கற்றுத்தந்தனர். நாம் சினிமாவைப் பார்த்துப் பழகிய ஆட்கள் அல்லவா! அடுத்த நாளே இனி விவசாயத்தில் குதித்துவிடவேண்டும், இயற்கை விவசாயம் செய்யவேண்டும், சூழல் காக்கவேண்டும் என்றெல்லாம் ஒரே சிந்தனையும் பூரிப்புமாக இருந்தது. ஆனால் எங்கே செய்வது என்று யோசித்தபோது மனம் சற்றே வாடிப்போனது. ஏனெனில் நான் இருப்பது பேராசிரியர் வேலையில், கரூர் நகரில். எனது சொந்த நிலம் இருப்...