Posts

Showing posts from 2017

வீணாய்ப் போன கல்வி

பொதுவாகவே   ஆசிரியர் என்றால் ஒரு மிக உயர்ந்த பணியாக கருதப்பட்ட காலம் இருந்தது. ஆசிரியரை கண்டால் ஒரு பயம், மரியாதை மற்றும் ஒரு பணிவும் இருந்தது. ஆனால் அந்த நிலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் ஆசிரியர் எங்கு இருந்தாரோ அங்கே சென்று தான் மாணவர்கள் தங்கள் கல்வியை கற்றனர். இன்றோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி ஓடும் நிலைக்கு வந்துள்ளனர்.  ஆசிரியர் என்பவர் மிக உயர்ந்த சமுதாய நிலையில் இருந்த காலம் போய், யார் வேண்டுமானாலும் ஆசிரியராக வரலாம் என்ற நிலை வந்துள்ளது.  குரு என்றால் இருளை விளக்குபவர் என்று பொருள். கு என்றால் இருள், ரு என்றால் அகற்றுதல் என்று பொருள். இன்று பல குருக்கள் (ஆசிரியர்கள்) தெளிவான மாணவர்களையும் இருள் நிலைக்கு இட்டுச்செல்கின்றனர்.  ஒருவன் எப்படி இயற்கையோடு இணைந்து தன் வாழ்வையும் தன்னோடுள்ள உயிர்களின் வாழ்வையும் மேம்படுத்துவது என்பதே உண்மையான கல்வி. ஆனால் இன்று எந்தக் கல்வியும் இயற்க்கைக்கு முக்கியம் கொடுப்பதோ அல்லது  இயற்கை  சார்ந்தோ இல்லை.  கல்வி என்பது பொருளாதாரத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது போய், பொரு...

விளையாட்டில்லாக் கல்வி வீண்

இன்றைய காலத்தில் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் மகன் நல்ல மனிதனாக, திறமைசாலியாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை. நான் கல்லூரி பேராசிரியராக இருப்பதால், மாணவர்களின் தன்மை என்ன என்பது  பற்றி தினமும் எளிதில் அறிய முடிகிறது. பொதுவாகவே இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலை கொடுக்க முடியாமல் அல்லது தெரியவில்லை எனும் போது தான் அவர்கள் தடம் மாறுகிறார்கள். பெரும்பாலான வகுப்பறைகள் புத்தக செய்திகளை மட்டுமே சொல்லித்தருகிறது. மதிப்பெண்னை மட்டுமே நோக்கப்படுத்தி மாணவர்களை இயந்திரமாக்கிக்கொண்டுள்ளது. உண்மையில், விளையாட்டு மட்டுமே ஒரு மாணவனை சிறந்த மாணவனாகவும், மனிதனாகவும் மாற்றும்.  இதைத்தான்  மகா கவி பாரதியார் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா. காலை எழுந்ததும் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா சின்னஞ்சிறு குருவி போலே ...

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பொங்கல் என்றவுடன் ஞாபகம் வருதே   ஞாபகம்  வருதே என்ற பாடல் வரிகள் மட்டுமே நினைவிற்கு வருகிறது .  நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அம்மா இருவரும் ஆசிரியராக இருந்தாலும், என் அப்பா விவசாயத்தை கவனித்து வந்தார். எங்களிடம் இரண்டு எருதுகள், இரண்டு மூன்று பசு மாடுகள், எருமை மற்றும் ஆண்டு தோறும் தோட்டத்து கருப்பு சாமிக்கு  வெட்ட ஒரு கிடாவும்  வளர்ப்போம்.  எங்கள் தோட்ட வேலைக்காக ஆட்களை ஆண்டு சம்பளத்திற்கு அப்பா சேர்ப்பார். அதில் மிகவும் என்னோட பாசமாக இருந்தவர் பகவதி அண்ணன். அவர் வேலை ஆள் என்றாலும் அவரை நான் அண்ணா என்றே கூப்பிட்டு பழக்கம். என் அப்பா மிகவும் கோவக்காரர். வாத்தியார் தோட்டம் என்று தான் எங்கள் தோட்டத்தை சொல்வார்கள். அந்த பகவதி அண்ணா என் அப்பாவிடம் மிகவும் அமைதியாகவே இருப்பார். எனக்கு சின்ன வயது முதலே படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை.  எனவே நான் பகவதி அண்ணனுடன் தோட்ட வேலைகள் கற்றுக்கொள்வேன். சோளம் விதைப்பது முதல் நெல், கம்பு, ராகி, வாழை, கரும்பு மற்றும் அனைத்து விதைப்பு முறைகளையும் பகவதி அண்ணண் கற்றுக்கொடுத்தார். நான் ஒன்றாம் வகுப...

மரியாதைக்குரிய முதல்வர் முனைவர். M.K.மனோகரன்

Image
எனது பேராசிரியர் பதவியைத் தொடங்கி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்த நிலையில்,  மூன்று கல்லூரி முதல்வர் போய் நான்காவது முதல்வரின்கீழ் பணிபுரிந்துவருகிறேன். நான்கு முதல்வர்களில் என்றும் நீங்கா நினைவில் இருக்கும் முதல்வர் முனைவர். மனோகரன் அவர்கள். நான் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தபோது, என்னிடம் மிகவும் நெருங்கிய ஒரு உறவினர் போல் நடந்துகொண்டார்.  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தினமும் அவருடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு. அவர் எனக்கு பாடம், பொது அறிவு மற்றும் மாணவர்கள் மேலாண்மை பற்றி கருத்துக்களைச் சொல்வார். பெரிய பெரிய புத்தகங்கள் தராத அறிவுசார்ந்த தகவல்கள் அவர் மூலமாக எனக்குக்கிடைத்தது. அவருடன் இருந்த இரண்டு வருடகாலங்களில் அவர் அனைவரையும் sir/madam என்றே சொல்லிப்பார்த்திருக்கிறேன். மாதாந்திர தேர்வு நடக்குமென்றால், 10 நாட்கள் முன்பே வினாத்தாள்கள் சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பித்த அனைத்து வினாத்தாள்களையும் சரிபாரத்துவிடுவார். சரிபார்ப்பு வேலை முடியவில்லை என்றால், ஞாயிறு அன்றும் கல்லூரியில் வேலை பார்ப்பார். இன்னமும் ஒரு முக்கியச்செய...

படைப்பாளி ஓர் ஆசிரியரால் உருவாக்கம்

மரியாதைக்குரிய எனது ஆசான் முனைவர் அ.கோவிந்தராஜூ அவர்களின் படைப்பாற்றலின் ஈர்ப்பால் நானும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் "ரௌத்திரம் பழகு" என்ற வலைப்பக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். இதில் பதிவுசெய்யும் அனைத்துப் பதிவுகளும் ஈசனருளால் நன்றாக அமையும்.