விளையாட்டில்லாக் கல்வி வீண்
இன்றைய காலத்தில் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் மகன் நல்ல மனிதனாக, திறமைசாலியாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை. நான் கல்லூரி பேராசிரியராக இருப்பதால், மாணவர்களின் தன்மை என்ன என்பது பற்றி தினமும் எளிதில் அறிய முடிகிறது. பொதுவாகவே இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலை கொடுக்க முடியாமல் அல்லது தெரியவில்லை எனும் போது தான் அவர்கள் தடம் மாறுகிறார்கள். பெரும்பாலான வகுப்பறைகள் புத்தக செய்திகளை மட்டுமே சொல்லித்தருகிறது. மதிப்பெண்னை மட்டுமே நோக்கப்படுத்தி மாணவர்களை இயந்திரமாக்கிக்கொண்டுள்ளது. உண்மையில், விளையாட்டு மட்டுமே ஒரு மாணவனை சிறந்த மாணவனாகவும், மனிதனாகவும் மாற்றும். இதைத்தான் மகா கவி பாரதியார் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா. காலை எழுந்ததும் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா சின்னஞ்சிறு குருவி போலே ...