பிளாஸ்டிக் எனும் அரக்கன்
மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது. ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான். தொலைக்கா...