பிளாஸ்டிக் எனும் அரக்கன்
மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது.
ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான்.
தொலைக்காட்சி ஒன்று வந்தவுடன், மனிதனின் மனம் சற்று மாறித்தான் போனது. ஆம். லட்சத்தில் ஒருவர் பயன் படுத்தி வந்த நெகிழி என்னும் பிளாஸ்டிக் சிறிது சிறிதாக மனிதனின் தினப் பயன் பாட்டில் வந்தது. மனிதனின் நாளைய எண்ணத்தில் மிக மிக முக்கியமானது தண்ணீர். தண்ணீரை சேமிக்க பயன் படுத்திய உலோகங்கள் மற்றும் மண் பானைகளின் கனம் மற்றும் பராமரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக ரப்பர் குடங்களுக்கு மாற்றியது. ரப்பர் குடங்கள் என்னும் பெயரில் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் மனிதனை தான் பிடியில் கொண்டு வர ஆரம்பித்தான்.
கையாள்வதும், விலை மலிவும் மனிதனின் மனத்தினைப் புரட்டிப் போட்டது. இதைப் பயன் படுத்திய மேலைய நாட்டினர், இயற்கையோட வாழ்ந்த மனிதனை செயற்கையான பிளாஸ்டிக் பயனாளிகள் ஆக்கிர். வாழை நாரையும், இலைகளையும், மட்டைகளையும் பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு, பிளாஸ்டிக் பொட்டலம் போ ஆரம்பித்தனர். நாம் பயன் படுத்தும் ஷாம்பு முதல் சாமிக்கு போடும் மாலை வரை, இன்று அனைத்துமே பிளாஸ்டிக் உறையில் தான் உள்ளது.
நம் வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கெல்லாம் இலையில் சோறு போட்டு, குவளையில் தண்ணீர் வைத்து மரியாதையை செய்த காலம் போய், பிளாஸ்டிக் இலை மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைப்பதை நாம் பெரிய கௌரவம் என்று கருத ஆரம்பித்து விட்டோம். பாட்டிலில் அடைக்கப் படும் தண்ணீர் எவ்வளவு நாட்கள் ஆனதென்று நமக்கு தெரியாது, அவை வெயிலில் வைக்கப் பட்டதா என்று தெறியாது, ஆனாலும் நாம் அதை பயன் படுத்தியே நமது பகட்டை வெளிப்படுத்துகிறோம்.
மனிதனின் சோம்பேறித்தனம் தான் சமைக்கும் உணவிலும் வந்தது. ருசிக்காகவும், வாழ்க்கையின் வேகமான ஓட்டத்திற்காகவும் நெகிழியை பயன்படுத்துவதென்பது மனிதனோடு ஒன்றி விட்டது. காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது குடிக்க மற்றும் சாப்பிட என அனைத்தும் இன்று பிளாஸ்டிக் தான். மாலை நேரங்களில் இன்று பல வீடுகளில் உணவு கடைகளில் இருந்ததே வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கும் உணவுகள் பிளாஸ்டிக் கொண்டு கட்டித் தரப்படுகிறது. அது பல எதிர் வினைகளை ஏற்படுத்தும் என்பது அறிந்தாலும் நாம் இன்னும் அதையே தான் செய்து வருகிறோம். இது நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றி வாழும் அனைத்து உயிர்களுக்கும் கேடாய் முடியும் என்பதை நாம் நினைப்பதில்லை.
நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
பிளாஸ்டிக்கின் தீமைகள்
பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக்கை தவிர்த்தல்
(நன்றி: தமிழ் விக்கிப்பீடியா )
இந்த பிளாஸ்டிக் என்னும் அரக்கனை நாம் அழிக்காவிடில், அவன் நம்மை விரைவில் அழிப்பான் என்பது கண்கூடு. பிளாஸ்டிக் குறித்த விளைவுகளை நாம் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்ததே கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் பேனாக்கள் தூக்கி எறியப்படுபவையாக இருக்கிறது.
கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு சிறிய கணக்கொன்றைச் சொல்கிறேன். ஒரு மாணவன் ஒரு பருவத்தில் (semester) 5 பால் பாயிண்ட் பேனாக்களை பயன் படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வகுப்பில் 50 பேர் பயின்றால் 250 refill தூக்கி எறியப்படும். மூன்று ஆண்டுகளில் மொத்தம் 3000. ஒரு கல்லூரி முழுவதும் சேர்த்தால் குறைந்தது 50000 தூக்கி எறியப்படும். இதற்கு பதிலாக, ink பேனாக்கள் பயன் படுத்தினால் எவ்வளவளோ பெரிய மாற்றம் கொண்டுவரலாம். அடுத்த தலை முறைக்கு பணம் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல அவர்களுக்கு இயற்கையை சேர்ப்பதும் முக்கியம்.
கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு சிறிய கணக்கொன்றைச் சொல்கிறேன். ஒரு மாணவன் ஒரு பருவத்தில் (semester) 5 பால் பாயிண்ட் பேனாக்களை பயன் படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வகுப்பில் 50 பேர் பயின்றால் 250 refill தூக்கி எறியப்படும். மூன்று ஆண்டுகளில் மொத்தம் 3000. ஒரு கல்லூரி முழுவதும் சேர்த்தால் குறைந்தது 50000 தூக்கி எறியப்படும். இதற்கு பதிலாக, ink பேனாக்கள் பயன் படுத்தினால் எவ்வளவளோ பெரிய மாற்றம் கொண்டுவரலாம். அடுத்த தலை முறைக்கு பணம் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல அவர்களுக்கு இயற்கையை சேர்ப்பதும் முக்கியம்.





Comments
Post a Comment