Posts

Showing posts from 2024

இடிக்கப்பட்டது ஸ்ரீதேவி தியேட்டர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் தூக்கநாயக்கன்பாளையம் என்னும் ஊரில் ஸ்ரீதேவி தியேட்டர் என்ற ஒரு திரையரங்கம் இருந்தது. கிட்டத்தட்ட 1960களில் இருந்து 2010 -2012 வரை இந்த தியேட்டர் தான் இங்குள்ள மக்களுக்கான மிகப்பெரிய ஒரு பொழுதுபோக்கு. எனக்கு நினைவு தெரிந்து 1985ல் நான் பார்த்த முதல் படம் முதல் கிட்டத்தட்ட 2000 வரை இந்த தியேட்டரில் அதிக படங்களை நான் பார்த்திருக்கிறேன். தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கான ஒரே ஒரு பொழுதுபோக்கு திரையரங்கம் ஸ்ரீதேவி தியேட்டர் மட்டுமே. நேற்று (19.04.24) எனது சொந்த ஊருக்கு வாக்களிப்பதற்காக இந்த திரையரங்கை கடந்து போகும் போது திரையரங்கம் முன்னாள் வைத்திருந்த மரங்கள் வெட்டப்பட்டிருந்தன மற்றும் திரையரங்கம் இடிக்கப்பட்டு ஒரே மண் குவியலாக காட்சிளித்தது மனதில் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தி இந்த பதிவை போட வைத்துள்ளது. இந்த சினிமா கொட்டகையில் தரை டிக்கெட், பெஞ்ச், பேக்பெஞ்ச், சேர், சோபா என நான்கு வகை இருந்தது.   ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் புது படங்கள் போடப்படும் மற்றும் அதற்குண்டான ...