விளையாட்டில்லாக் கல்வி வீண்
இன்றைய காலத்தில் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் மகன் நல்ல மனிதனாக, திறமைசாலியாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை. நான் கல்லூரி பேராசிரியராக இருப்பதால், மாணவர்களின் தன்மை என்ன என்பது பற்றி தினமும் எளிதில் அறிய முடிகிறது. பொதுவாகவே இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலை கொடுக்க முடியாமல் அல்லது தெரியவில்லை எனும் போது தான் அவர்கள் தடம் மாறுகிறார்கள்.
பெரும்பாலான வகுப்பறைகள் புத்தக செய்திகளை மட்டுமே சொல்லித்தருகிறது. மதிப்பெண்னை மட்டுமே நோக்கப்படுத்தி மாணவர்களை இயந்திரமாக்கிக்கொண்டுள்ளது. உண்மையில், விளையாட்டு மட்டுமே ஒரு மாணவனை சிறந்த மாணவனாகவும், மனிதனாகவும் மாற்றும். இதைத்தான் மகா கவி பாரதியார்
பெரும்பாலான வகுப்பறைகள் புத்தக செய்திகளை மட்டுமே சொல்லித்தருகிறது. மதிப்பெண்னை மட்டுமே நோக்கப்படுத்தி மாணவர்களை இயந்திரமாக்கிக்கொண்டுள்ளது. உண்மையில், விளையாட்டு மட்டுமே ஒரு மாணவனை சிறந்த மாணவனாகவும், மனிதனாகவும் மாற்றும். இதைத்தான் மகா கவி பாரதியார்
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.
காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
என்ற பாடல் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார். ஆனால் இன்றைய மாணவர்களின் நிலை,
விளையாடிவிடாதே பாப்பா,
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,
கூடிவிடாதே பாப்பா,
உன்னைவிட அவன் அதிக மதிப்பெண் பாப்பா,
காலை முதல் இரவுவரை பாப்பா,
பள்ளி, கல்லூரி அனைத்திலும் படிப்பு பாப்பா,
அது புரிந்தாலும், புரியவில்லைனாலும் படி பாப்பா,
குருவி, வண்ணத்துபூச்சியெல்லாம், நமக்கு வேணாம் பாப்பா,
ஏன்னா, அது உன்னை மகிழ்ச்சி படுத்திவிடும் பாப்பா,
அப்புறம் நீ பணம் சேர்க்கும் இயந்திரமாக மாற மாட்டாய் பாப்பா.
இன்றைய குழந்தைகள், அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வளர்வதால், அவர்களுக்கு, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு என்பது, கணினி மற்றும் கைபேசியில் விளையாடுவது மட்டுமே. இதன் காரணமாக, இளம் வயதிலேயே கண் பார்வை குறையத் தொடங்கிவிடுகிறது. உடல் உழைப்பு இல்லை என்பதால், உடல் பருமன் ஏற்படுகிறது. ஒரு மந்த நிலை, மற்றும் குழந்தைகளுடன் விளயாடாமல், மின்சார உபகரணங்களுடன் விளையாடுவதால், மூர்க்கத்தனம் வருகிறது. இதுவே, அவர்கள் தவறான செயல்களில் ஈடுபட காரணமாகிறது.
விளையாட்டு என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானது. ஆனால், பணத்தாசை பிடித்த சமூகம், குழந்தைகளை, பெற்றோர்கள் மற்றும் கல்விக்கூடங்கள் மூலம், அவர்களது உரிமையான விளையாட்டை அவர்களிடமிருந்து பிரித்து அவர்கள் மாற்றான் தாய் வளர்ப்பில் வளரும் நிலைக்கு தள்ளி விடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும், குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. நமது நாட்டில், நவம்பர் மாதம் 14ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுவதாக சொல்லிக்கொள்கிறோம். நமது முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளே குழந்தைகளின் நாள். ஒவ்வொருவரும் போற்றிக்கொண்டவேண்டிய பொக்கிஷங்களான குழந்தைகளை, நாம் கல்வி என்னும் பெயரில் கொடுமைப்படுத்தி வருகிறோம்.
கல்வி என்பது கற்பவனுக்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும். இந்த விளையாட்டில்லா கல்வி, ஒருவித இறுக்கத்தை, பயத்தை, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அறிவு மேம்பாட்டிற்கு கல்வி என்பது போய், பண மேம்பாட்டிற்கு எனும் நிலைக்கு கல்வி தள்ளப்பட்டதாலேயே, குழந்தைகளுக்கு விளையாட்டென்பது கனவாய்ப் போனது. கடந்த வாரங்களில் ஒட்டு மொத்த தமிழகமே சல்லிக்கட்டுக்காக போராடியது. பலபேர் சொன்னார்கள், சல்லிக்கட்டு என்பது நமது கலாச்சாரம், பண்பாடு, மாட்டினம் காக்க நடத்தப்பட்டது என்றெல்லாம். ஆனால், அது ஒரு விளையாட்டு. சீறிவரும் காளையைப் பிடிக்க உடல் பலம் மட்டும் போதாது, மனபலமும், மதிநுட்பமும் வேண்டும் என்பதே சல்லிக்கட்டின் முக்கிய அம்சம்.
ஸ்டேட் போர்டு என்று சொன்னார்கள், கான்வென்ட் என்று சொன்னார்கள், மெட்ரிகுலேஷன் என்று சொன்னார்கள், CBSE என்று சொன்னார்கள், இப்போது ICSE என்று சொல்கிறார்கள். நாளுக்கு நாள் வெளிநாட்டினரின் கல்வியின் மேல் ஏற்படும் மோகத்தாலும், அதிக பணம் செலுத்திப் படிக்கவைக்கும் கல்வியே உயர்ந்த கல்வி என்றும் எண்ணம் கொண்டதாலேயே, கல்வி இன்று வியாபாரமாகவும், விளையாட்டு என்பது பேரம் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. ராஜராஜ சோழனும், கரிகால் சோழனும் எந்த CBSE அல்லது ICSE படிப்பை படித்தார்கள்? என்று ஒருவன் தன் தாய் மொழியில் கல்வி கற்கிறானோ, அன்றுதான் அவனால் உலகம் புகழ வாழமுடியும். தரமான கல்வி என்பது, அறிவுசார்ந்த, உடல் சார்ந்த, மனம் மற்றும் மதிநுற்பம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே, ஒரு குழந்தை ஒரு தேர்ச்சி பெற்ற மனிதனாக வரும். அதற்கு விளையாட்டென்பது மிக மிக முக்கியமான ஒன்று.
குருவி, வண்ணத்துபூச்சியெல்லாம், நமக்கு வேணாம் பாப்பா,
ReplyDeleteஏன்னா, அது உன்னை மகிழ்ச்சி படுத்திவிடும் பாப்பா,
அப்புறம் நீ பணம் சேர்க்கும் இயந்திரமாக மாற மாட்டாய் பாப்பா.
இந்த வரிகள் அருமை. உரத்த சிந்தனை; உரிய நேரத்தில் வெளியாகும் பதிவு.
இன்றைய குழந்தைகள், அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வளர்வதால், அவர்களுக்கு, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு என்பது, கணினி மற்றும் கைபேசியில் விளையாடுவது மட்டுமே. இதன் காரணமாக, இளம் வயதிலேயே கண் பார்வை குறையத் தொடங்கிவிடுகிறது. உடல் உழைப்பு இல்லை என்பதால், உடல் பருமன் ஏற்படுகிறது. ஒரு மந்த நிலை, மற்றும் குழந்தைகளுடன் விளயாடாமல், மின்சார உபகரணங்களுடன் விளையாடுவதால், மூர்க்கத்தனம் வருகிறது. இதுவே, அவர்கள் தவறான செயல்களில் ஈடுபட காரணமாகிறது. எது உண்மை தற்போது உள்ள அனைத்து குழந்தைகளும் இதை தான் செய்கின்றனர்..காலம் மாறும் நிலையில் அனைவரும் மாறுகின்றனர்..தற்போது வரும் Technology அனைத்து குழந்தைகளின் வாழ்க்கை பாதிப்பு...
ReplyDeleteஅருமை
ReplyDelete