மரியாதைக்குரிய முதல்வர் முனைவர். M.K.மனோகரன்
எனது பேராசிரியர் பதவியைத் தொடங்கி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்த நிலையில், மூன்று கல்லூரி முதல்வர் போய் நான்காவது முதல்வரின்கீழ் பணிபுரிந்துவருகிறேன். நான்கு முதல்வர்களில் என்றும் நீங்கா நினைவில் இருக்கும் முதல்வர் முனைவர். மனோகரன் அவர்கள்.
நான் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தபோது, என்னிடம் மிகவும் நெருங்கிய ஒரு உறவினர் போல் நடந்துகொண்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தினமும் அவருடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு. அவர் எனக்கு பாடம், பொது அறிவு மற்றும் மாணவர்கள் மேலாண்மை பற்றி கருத்துக்களைச் சொல்வார்.
பெரிய பெரிய புத்தகங்கள் தராத அறிவுசார்ந்த தகவல்கள் அவர் மூலமாக எனக்குக்கிடைத்தது. அவருடன் இருந்த இரண்டு வருடகாலங்களில் அவர் அனைவரையும் sir/madam என்றே சொல்லிப்பார்த்திருக்கிறேன்.
மாதாந்திர தேர்வு நடக்குமென்றால், 10 நாட்கள் முன்பே வினாத்தாள்கள் சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பித்த அனைத்து வினாத்தாள்களையும் சரிபாரத்துவிடுவார். சரிபார்ப்பு வேலை முடியவில்லை என்றால், ஞாயிறு அன்றும் கல்லூரியில் வேலை பார்ப்பார்.
இன்னமும் ஒரு முக்கியச்செய்தி அவரைப்பற்றி என்னவென்றால், ஒரு துறையில் (department ) யாராவது விடுப்பு எடுத்தால், மற்ற ஆசிரியர்கள் அந்த வகுப்பைக் கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட 4 முதல் 5 மணிநேரம் வகுப்பு இருக்கும். நான்கு தளங்கள் கொண்ட கல்லூரி, இரண்டு முறை ஏறி இறங்கும் இளசுகளுக்கே நாக்குத்தள்ளும். இவரோ சாதாரணமாக 4 முதல் 5 முறை சுற்றிவருவார். அப்போது ஏதாவது ஒருபேராசிரியர், சிறிது வாடி இருந்தாலும், உடனே அவரை ஓய்வெடுக்கச் சொல்லி, அந்த வகுப்பை அவரே கவனித்துக்கொள்வார்.
இதுபோன்ற ஒரு மாமனிதர் கீழே பணிபுரிந்த காலத்தைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று எத்தியோப்பிய நாட்டில் பணிபுரியும் அவர் பல்லாண்டு வாழவேண்டும்.

நீங்கள் பெரிதும் மதிக்கும் மனோகரன் என்னுடைய தலைமாணாக்கரில் ஒருவர். மகா திறமைசாலி. அவர் வள்ளுவரில் பணியாற்றியபோது அவரைச் சந்திதிருக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் காலில் விழுந்து வணங்கியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅவர் வாழ்க; அவர் குலம் வாழ்க. அவர் புகழ் பாடும் நீர் வாழ்க; நீடு வாழ்க.