வீணாய்ப் போன கல்வி
பொதுவாகவே ஆசிரியர் என்றால் ஒரு மிக உயர்ந்த பணியாக கருதப்பட்ட காலம் இருந்தது. ஆசிரியரை கண்டால் ஒரு பயம், மரியாதை மற்றும் ஒரு பணிவும் இருந்தது. ஆனால் அந்த நிலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் ஆசிரியர் எங்கு இருந்தாரோ அங்கே சென்று தான் மாணவர்கள் தங்கள் கல்வியை கற்றனர். இன்றோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி ஓடும் நிலைக்கு வந்துள்ளனர்.
ஆசிரியர் என்பவர் மிக உயர்ந்த சமுதாய நிலையில் இருந்த காலம் போய், யார் வேண்டுமானாலும் ஆசிரியராக வரலாம் என்ற நிலை வந்துள்ளது. குரு என்றால் இருளை விளக்குபவர் என்று பொருள். கு என்றால் இருள், ரு என்றால் அகற்றுதல் என்று பொருள். இன்று பல குருக்கள் (ஆசிரியர்கள்) தெளிவான மாணவர்களையும் இருள் நிலைக்கு இட்டுச்செல்கின்றனர்.
ஒருவன் எப்படி இயற்கையோடு இணைந்து தன் வாழ்வையும் தன்னோடுள்ள உயிர்களின் வாழ்வையும் மேம்படுத்துவது என்பதே உண்மையான கல்வி. ஆனால் இன்று எந்தக் கல்வியும் இயற்க்கைக்கு முக்கியம் கொடுப்பதோ அல்லது இயற்கை சார்ந்தோ இல்லை. கல்வி என்பது பொருளாதாரத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது போய், பொருளாதாரத்திற்க்காக கல்வி கற்றுக்கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.
பொதுவாகவே இன்றைய இளைஞர்கள் மிக மதி நுட்பம் கொண்டவர்களா உள்ளனர். எனவே கல்வி மற்றும் பாடத்திட்டம் அவர்களின் விருப்பம் மற்றும் கற்பனைத்திறன் மேம்பாபாட்டிற்கு உந்துதலாக இருக்க வேண்டும். ஏதோ பாடத்தை படித்தோம், பட்டம் பெற்றோம் ஆசிரியரானோம் என்று தான் பல ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். தாங்கள் கற்ற கல்வியில் என்ன புதுமை வந்துள்ளது, அதை எப்படி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதை துளியும் அறியாத ஆசிரியர்கள் இன்று அநேக பேர்.
இன்று கல்வி நிலையங்கள் நிறுவனங்களாக நடத்தப்படுகின்றன. மாணவர்கள் கற்கும் திறனை மறந்து, மனனம் செய்யும் இயந்திரங்களாக்க படுகிறார்கள். நேற்றைய நாளேட்டில் (The New Indian Express, 21.03.17. p.1) இந்தியா 155 நாடுகளின் மகிழ்ச்சிப்பட்டியலில் 122 வது இடத்தை பிடித்துள்ளதாக செய்தி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், இன்றய வீணாய்ப்போன கல்வியும், கல்விநிறுவனங்களுமே.
ஒரு மாணவனின் தேவை என்ன என்பதைக் கேட்காமல், கல்விநிறுவனங்களின் தேவைக்காக, மாணவர்களை பணித்து, நிறுவங்களுக்கு அடி மாடுகளைப் போல அனுப்பி விட்டு, நாங்கள் தான் இந்த மாவட்டத்திலேயே அதிக வேலைவாய்ப்பை தந்த நிறுவனம் என்று மார்தட்டிக்கொள்வதும், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு, பத்தாம் வகுப்பு பாடம் நடத்துவதும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பனிரெண்டாம் வகுப்பு பாடம் நடத்துவதும், தூங்க விடாமல், விளையாட விடாமல், எவருடனும் பேசவிடாமல், குருட்டு மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கிறார்கள். உடனே அதை செய்தித்தாள்களிலும், பதாகைகளிலும் வைத்து தங்கள் பள்ளி மற்றும் கல்லூரியின் பெருமை பறைசாற்றுகின்றனர். இது அவர்களின் நிறுவன சேர்க்கை பிடிக்கும் யுக்தி. (Attracting customers).
இந்த நேரத்தில், முனைவர்.வே.இறையன்பு எழுதிய வரிகள் தான் நினைவில் வருகிறது. "இலக்கியத்தில் இதயத்தை படிக்க நினைப்பவனை, இதயத்தை அறுத்துப்பார்க்கச்சொன்னால் வெறுத்துப்போக மாட்டானா". விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவனை, நீ வங்கியாளனாகத்தான் ஆக வேண்டும் என்று கூறும் ஆசிரியர் அவனக்கு செய்யும் துரோகமே தவிர, நல்ல வழிகாட்டல் இல்லை.
இன்றைய பாடத்திட்டமும் மிகவும் குளறுபடிகள் நிறைந்துள்ளது. ஒரு பட்டம் படிக்கும் மாணவனுக்கு எத்தனை பாடங்கள் வைக்க வேண்டும் என்பது போய், எந்த பாடங்களை வைத்தால் நமது புத்தகங்கள் விற்பனையாகும் என்று பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களும், பாட ஆய்வுக்குழு உறுப்பினர்களும் நினைக்க தொடங்கி விட்டனர். மேலும், சில பல்கலைக்கழகங்கள் புத்தக விற்பனை நிலையங்களுடன் கூட்டு சேர்த்து தரமற்ற புத்தகங்களை பரிந்துரை செய்கின்றனர். இது மாணவர்களின் அறிவாற்றலை சீர்கெடுகின்றது.
ஒருநாளைக்கு 4 பாடங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 1 மணிநேரம் மாணவர்கள் தங்கள் நேரத்தை நூலகத்தில் செலவிட வேண்டும். நூலகங்கள் இல்லா கல்வி நிறுவனங்கள், தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விதி முறைகள் கொண்டுவந்தால் மட்டுமே, கல்வி என்பது மாணவர்களின் வெற்றிக்கு வழி வகுக்கும். கல்லூரிகளில் மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். 49 மதிப்பெண் பெற்றவர் தகுதி பெறாதவர் என்றும், 50 பெற்றவர் தகுதி பெற்றவர் என்றும் சொல்லப்படுவது ஒரு முட்டாள் தனமான முறை. மேலும், பாடத்திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி உள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால், 8 இன்ச் அளவுள்ள காலணியை மட்டும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ, அது போல் தான் இன்றைய பாடத்திட்டமும்.
நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் விடுமுறை என்றால் மனம் வாடும். ஆனால், இன்று மழைவராதா, புயல் வராதா, யாராவது சாக மாட்டார்களா, நமக்கு விடுமுறை கிடைக்கும் என்ற எண்ணம் அனைத்து மாணவர்கள் எண்ணத்திலும் வந்து விட்டது. வீணாய்ப் போன கல்வி முறை மாறி செம்மையான கல்வி எப்போது வரும் என்ற ஏக்கத்தில் இதை எழுதியுள்ளேன்.
என் மனதில் தற்போது இருக்கின்ற எண்ணம்...
ReplyDeleteகல்வி என்பது பணம்
ஆனால்
பணம் இருந்தால் வேலை
படித்தவர் வேலை இல்லாமல் இருக்கின்றன.காரணம் No study only paying some amount..so appoinment job..
49 மதிப்பெண் பெற்றவர் தகுதி பெறாதவர் என்றும், 50 பெற்றவர் தகுதி பெற்றவர் என்றும் சொல்லப்படுவது ஒரு முட்டாள் தனமான முறை இதிலும் கொள்ளை 1Mark so apply revaluation amount of 450..ஒரு வேலை Pass என்றால் No refund money...mistake of univercity so. Solution is not proffesers only money based appointing man...first solutions is in our house any problem so amgery with student life..... one man put fails any student atten susaiiiii.....
Tamilnadu education system is very damaged....no study. When education minister why is possible....
Students side one mistake. Any doubt.student standclarifying doubt ...
கல்வி என்பது பொருளாதாரத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் ..தற்போது எதையும் கற்றுதருவதில்லை..
Students overall exam start before oneday start study so no use. Mukup. Mukup what concept wht question no thinking. Only write answer will pass ..50% student relatedto someanswer so fail...is problm..
பாட கல்வி உன் வாழ்கை கல்வி..
❇ஐயா, கல்வி வீணாய் போனதற்கு காரணம் ஆசிரியரோ, மாணவனோ கிடையாது.கல்வியை விற்றுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களே முக்கிய காரணம் ஆகும்.அவர்களின் எச்சை சம்பளமே,இன்று ஒரு ஆசிரியரின் தரத்தை நிர்ணயிக்கிறது.ஐயா சற்று யோசித்து பாருங்கள்,தன் உடலை விற்று பிழைக்கும் ஒரு விபச்சாரி கூட,தன் உடம்பிற்கான விலையை தானே நிர்ணயம் செய்கிறாள்.ஆனால் இங்கோ,எந்த ஆசிரியராவது தங்களின் திறமைக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடிகிறதா,இல்லையே.....
ReplyDelete❇ ஆசிரியர்களின் மூளையை மூலதனமாக வைத்து, மாணவர்களிடம் கொள்ளை அடிக்கும் இந்த கும்பல்கள் இருக்கும் வரை,கல்வியின் தரத்தை ஒரு போதும் உயர்த்த முடியாது ஐயா.
❇ என்று பணக்காரனின் குழந்தையை ஏசி அறையிலும்,ஏழையின் குழந்தையை தூசி அறையிலும் உக்கார வைத்தார்களோ அன்றே நாம் தரமான கல்வியை தொலைத்து விட்டோம்.......
✳✳ By விNOத்✳✳
ஐயா நீங்கள் தினமும் எங்களிடம் சொல்லும் கருத்து அனைத்தும் உணமை என்று கருதுகிறான் ......
ReplyDeleteஐயா நீங்கள் தினமும் எங்களிடம் சொல்லும் கருத்து அனைத்தும் உணமை என்று கருதுகிறான் ......
ReplyDelete