Posts

Showing posts from 2018

பழனியப்ப தாத்தா எனும் பாலம்

Image
இந்த தலைப்பைப் பார்த்த உடன் நான் ஒரு நபரைப் பற்றி மட்டுமே சொல்லப்ப போகிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல. சரி நான் சொல்ல வரும் தகவலை விவரிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர் கொங்கர்பாளையம். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம். இங்கு பலதரப்பட்ட மக்கள் வழ்ந்தாலும் ஒற்றுமை என்பது இருக்கும்.  என் தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த ஐந்து பேருக்கும் நண்பனாக இருந்து அவர்களுக்குள் வரும் அனைத்து சண்டை சச்சரவுகளை சமாளித்து ஒற்றுமையை ஏற்படுத்திய பொறுப்பில் இருந்தவரே பழனியப்பா தாத்தா. உலகத்தில் எதார்த்தமான மனிதர்கள் இருந்தார்கள் என்றால் அது அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. யார் வீட்டிற்கு வந்தாலும் பாகுபாடில்லாமல் நமது குடும்ப உறுப்பினர் போலவே நடந்து கொள்ளும் பாங்கு அவரின் தனித்தன்மை. அவர் எங்களின் மூன்று தலை முறையோடு பாசமாகவும் பாலமாகவும் இருந்த மாபெரும் மனிதர். அனைவரையும் ஏசாமி என்று அவர் பாசமா அழைக்கும் குரல் இன்னும் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறது. பணம் மற்றும் பொருளுக்கு மதிப்பளிக்க...

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

Image
மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது.  ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான். தொலைக்கா...

உயிரா? மயிரா?

Image
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் என் மேல் சற்று வருத்தமோ, ஐயமோ வந்திருக்கும். என்னடா இவன் படித்தவன், பேராசிரியராக இருப்பவன் இப்படி பண்பில்லாமல் தலைப்பை வைத்திருக்கிறான் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்லியிருப்பதில் தவறில்லை. அதைத்  திருக்குறளில் திருவள்ளுவரே சொல்கிறார்.  "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" மயிர் என்பது தான் சரியான தமிழ்ச் சொல். நாம் தான் நாகரிகம் என்ற போர்வையில் சில தமிழ்ச் சொற்களை தவறான வார்த்தைகளுக்குப் பயன் படுத்தி வருகிறோம். சரி நான் சொல்ல வரும் தகவலுக்கு வருகிறேன். ஆடிமாதம், அருமையான குளிர்ந்த காற்று, நல்ல அமைதியான இரவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு ஓய்வு. புதன் (18.07.18) இரவு சரியாக 8.30 மணிக்கு நானும் என் மனைவியும் வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென யாரோ தான் செல்லும் வண்டியில் இருந்து விழுந்த இரைச்சல். நானும் எனது மனைவியும் ஓடிப்போய் பார்த்தோம். கிட்டத் தட்ட அறுபது வயது இருக்கும் பெரியவரும் அவரது மனைவியும் சா...

இன்றைய கல்விமுறை சரிதானா

எனது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை. அவளுடைய பாடத்தில் மாசுபாடு(Pollution), இணையம்  (internet),  கணிணி  (computer) போன்றவற்றை முட்டாள் வல்லுநர் குழு இணைத்துள்ளது.  தண்ணீர், நிலம், காற்று என்று பிரித்து பார்க்கும் தன்மையே வராத குழந்தைக்கு மாசுபாட்டின் வகைகள், அவைகள் எப்படி, ஏற்படுகிறது, அவற்றை தவிர்க்கும் வழிமுறை என்றெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறது.  நான் கிராமத்தில் வாழ்ந்தவன், நிலம், நீர், காற்று என பிறப்பிலிருந்தே ஒன்றிணைந்து இருந்ததால் அது பற்றித் தெரியும். ஆனால் எனது குழந்தை  நகரத்தில் இருக்கிறது. காலை வீட்டிலிருந்து பள்ளி மற்றும்  பள்ளியிலிருந்து வீடு, இதுதான் வாழ்க்கை. அவளிடம் எனது மனைவி ஆங்கிலத்தில் இந்தக் கேள்வியை புத்தகத்தைப் பார்த்துக் கேட்டார் "What is the source of water?", அதற்கு அந்தப் பிஞ்சுக் குழந்தை "Riva water" என்றது. அதற்கு தர்மஅடி விழுந்தது.  அழுது கொண்டே என்னிடம் அப்பா water Riva companyல் தானே  தயாரிக்கிறார்கள் அப்புறம் ஏன் அம்மா என்னை அடிக்கிறார்கள் என்றது என் குழந்தை கண்ணீருடன்.  அவ...

எங்கே போகிறோம்?

எனது வயது 38. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது கிராமம் பச்சைப் போர்வை போர்த்தியது போல் எங்கு நோக்கினும் பசுமையாகவே இருக்கும். மரங்களும் செடிகளும் நிறைந்த அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.  காலையில் பள்ளி செல்லும் போது வயல்களின் வரப்புகளில் நடந்த போது பாதத்தில் பனித்துளி பட்டு ஏற்பட்ட சிலிர்ப்பு இப்போதும் குளிரவைக்கிறது. மதிய உணவுக்கு பள்ளியில் இருந்து பக்கத்து தோட்டத்திற்கு சென்று உணவருந்தி அங்கே உள்ள பழ மரங்களில் குரங்குகள் போல் ஆடிப் பாடிய ஆட்டம் அருமையான நினைவுகள்.  மாலை பள்ளி முடிந்து வீடு வரும் வரை ஒரே கொண்டாட்டம் தான்.