எங்கே போகிறோம்?

எனது வயது 38. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது கிராமம் பச்சைப் போர்வை போர்த்தியது போல் எங்கு நோக்கினும் பசுமையாகவே இருக்கும். மரங்களும் செடிகளும் நிறைந்த அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது. 

காலையில் பள்ளி செல்லும் போது வயல்களின் வரப்புகளில் நடந்த போது பாதத்தில் பனித்துளி பட்டு ஏற்பட்ட சிலிர்ப்பு இப்போதும் குளிரவைக்கிறது. மதிய உணவுக்கு பள்ளியில் இருந்து பக்கத்து தோட்டத்திற்கு சென்று உணவருந்தி அங்கே உள்ள பழ மரங்களில் குரங்குகள் போல் ஆடிப் பாடிய ஆட்டம் அருமையான நினைவுகள். 

மாலை பள்ளி முடிந்து வீடு வரும் வரை ஒரே கொண்டாட்டம் தான். 

Comments

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்