நஞ்சுண்ணும் பிள்ளைகள்
என்னப்பா நஞ்சுண்ணும் பிள்ளைகள்னு தலைப்பு வச்சிருக்க. உன்பேரு நஞ்சப்பானு இருப்பதாலயா? என்று பலரது எண்ணத்தில் தோன்றும். இதோ விளக்கம் தருவதற்கு முன் எனது பெயர் பற்றி சொல்றேன் கேளுங்க. நஞ்சப்பா-நஞ்சு+அப்பா. நஞ்சு-விஷம், அப்பா-தொற்றாத. அதாவது விஷம் தொற்றாதவன் நான் என்று பொருள். சரி சரி கோவப்படாதீங்க. தலைப்புக்கு வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஈஷாயோகா மையம் நடத்திய இயற்கை விவசாயத்தின் நுழைவு வாயில் என்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். எனக்கு சிறு வயது முதலே விவசாயம் செய்வதிலும் கால்நடைகள் வளர்ப்பிலும் அதீத ஆர்வமே இந்த நிகழ்வின் ஈர்ப்புக்கு காரணம். ஒரு நாள் பயிற்சி. 20 விதமான இடுபொருட்களை செலவில்லாமல் தயாரிப்பது எப்படி என்று கற்றுத்தந்தனர்.
நாம் சினிமாவைப் பார்த்துப் பழகிய ஆட்கள் அல்லவா! அடுத்த நாளே இனி விவசாயத்தில் குதித்துவிடவேண்டும், இயற்கை விவசாயம் செய்யவேண்டும், சூழல் காக்கவேண்டும் என்றெல்லாம் ஒரே சிந்தனையும் பூரிப்புமாக இருந்தது. ஆனால் எங்கே செய்வது என்று யோசித்தபோது மனம் சற்றே வாடிப்போனது. ஏனெனில் நான் இருப்பது பேராசிரியர் வேலையில், கரூர் நகரில்.
எனது சொந்த நிலம் இருப்பது கோபிசெட்டிபாளையத்தில். அதுவும் எனது நிலம் என்று சொல்லமுடியாது, எனது தந்தை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் குழந்தைகள் எதிர்காலம், படிப்பு என யோசித்து, நடைமுறையில் இது சாத்தியமா என்ற எண்ணத்தில் நாட்கள் ஓடின. ஒருவருடம் கழித்து மீண்டும் ஈஷாயோகா மையம் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் என்ற பயிற்சிக்கு அழைப்பு விடுத்தது.
சனி ஞாயிறுகளில் நடந்ததால் அதையும் பார்த்துவிடலாம் என்று கிளம்பிவிட்டேன். காலை 9 மணிக்கு கண்ணாடி அணிந்து மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார். அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துக்குமார் அண்ணா அந்த பயிற்சியாளரை அறிமுகம் செய்தார். முத்துக்குமார் அண்ணா ஏற்கனவே போனபயிற்சியில் இருந்ததால், அவர் அறிமுகமானவர் அல்லவா.
Dr.புண்ணியமூர்த்தி, கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தலைமை மருத்துவர் மற்றும் ஆலோசகர் என்று சொன்னார்கள். Projector வைத்து உங்களுக்கு விளக்குவார் என்றார்கள். அட இது ஏதோ நாம கல்லூரியில் செய்யும் ஏமாற்று வேலை போலவே இருக்குதேனு சற்று மனதில் ஒரு ஓட்டம்.
ஏமாற்று வேலைனு சொல்வதை தவறாக நினைக்கவேண்டாம், இயற்கையில் காற்றும் ஒளியும் இருக்க, இருட்டு அறைகட்டி அதில் விளக்கும் ACயும் போட்டு யார் பேசுகிறார்கள் யார் கவனிக்கிறார்கள் என்றே தெரியாமல் பாடம் நடத்துவதையும், படிப்பதையும் அறிவியல் முன்னேற்றம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி உலகிற்கு மாசு ஏற்படுத்துவதையே சொல்கிறேன்.
அந்த சிறப்பு விருந்தினர் பேச ஆரம்பித்தார். உண்மையில் அவர் பெயருக்கு ஏற்றாற்போல் புண்ணியம் செய்தவர். என்ன எளிமை. அன்பும் கருணையும் அவரது வார்த்தைகளில் வழிந்தோடியது. ஓ! கடவுளே சற்று நேரத்தில் எனது எண்ணைத்தை தவறாக்கினாயே என்ற குற்ற உணர்வு.
பேச ஆரம்பித்தார், இடையிடையே சில நகைச்சுவை என்று நேரம் போனதே தெரியவில்லை. திரையில் படம் தெரியும், அதற்கான பொருட்கள் திரைமுன்னே வைத்து மருந்து செய்து காண்பிக்கப்படும். நாம் அஞ்சரைப் பெட்டி என்று சொல்வோமே, சமையலரையில் சிறது சிறிதாக கிண்ணங்கள் ஒரு வட்ட அல்லது சதுரப்பெட்டியே அது.
அதில் இருக்கும் பொருட்களே அவர் பயன்படுத்தும் பொருட்கள். மேலும் நமது தோட்டங்களில் களைச்செடி என்று அழிக்கப்படும் சில மூலிகைகள் அவ்வளவுதான். மாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களுக்கு எவ்வளவு எளிய மருத்துவம். அப்போது அவர் சொன்ன முக்கியமான வார்த்தை மலட்டுத்தன்மை.
அது பற்றியும் பூச்சி மற்றும் பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு மாடுகளை பாதிக்கும் என்பதை விவரித்தார். மதியத்திற்கு மேல் மாடுகளை வைத்து அந்த மருந்துகளை எவ்வளவு தருவது எவ்வாறு தருவது என்ற செய்முறையும் செய்து காட்டினார். அற்புதமான பயிற்சி. அதற்கான பின்னூட்டம் கிழே
https://youtu.be/4dB6B3WccKg
சரி. இவ்வளவு தூரம் விவரிச்சாச்சு. இதுக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்புனு நீங்கள் கேட்பது புரிகிறது. என்ன செய்வது, நமக்கு எல்லாமே உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டோம். அது வாழ்க்கை அல்ல என்பதற்காகவே இவ்வளவு நீட்டுகிறேன். பொறுமையாக கீழே படியுங்கள்.
பயிற்சி முடித்த பின்னர் வழக்கம் போல மாடு வாங்க வளர்க்க என்ற எண்ணம் ஓடினாலும், பூச்சிக்கொல்லி பற்றிய முழுமையான அறிவைப்பெறவே அடுத்தகட்ட தேடுதலை ஆரம்பித்தேன். அதற்கு சரியானதாக திரு.பூச்சி.செல்வம், விவசாயத்துறை ஆராய்சியாளர் கிடைத்தார்.
பூச்சிகளின் வகைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் தீமைகளைப் பற்றி மிகவும் அற்புதமான ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் வகுப்பையோ அல்லது அவரது வகுப்பில் அவர் சொல்லும் கருத்துக்களையோ கேட்டால் நமக்கு எளிதில் புரிந்துவிடும், இந்த உலகம் அழிவின் விழிம்பில்தான் இருக்கிறதென்று.
1950வரை நடைபெற்று வந்த இயற்கையோடான விவசாயம், பச்சைப்புரட்சி என்ற பெயரில் பாழாக்கப்பட்டது. விளைவு மண் மலடாது. பயிர்களில் மாற்றம். பூச்சிகளினால் அழிவு இப்படி பெரிய மாற்றம். அந்த சூழலில் பூச்சிகளை அழிக்க இரசாயன நஞ்சுக்கொல்லிகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இது பற்றி நம்மாழ்வார் ஐயா பல இடங்களில் பேசியுள்ளார்.
பூச்சிகள் இறந்தவுடன் நாம் விவசாயத்தில் சாதித்தோம் என்ற இறுமாப்பு. உண்மையில் நாம் கொல்வது நல்ல பூச்சிகளையும் தான் என்பதையும் மறந்து விட்டோம். இயற்கை ஒரு அருமையான உணவுச்சங்கிலியை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு வளையம் உடைந்தாலும் அனைத்தும் உடைந்து போகும்.
அவ்வாறு நாம் உடைத்தெரிந்த வளையம் தான் நன்மை செய்யும் பூச்சிகள். இவை யாவும் பயிரின் மேலே இருப்பவை. பயிரை சேதமாக்கும் பூச்சிகளை உண்பவை. தீமை செய்யும் பூச்சிகள் பயிரின் இலைமறைவில் வாழ்பவை. விளைவு தீமைசெய்பவை தப்பித்துக்கொண்டன. நன்மை செய்பவை மாண்டுபோயின.
நாம் பயிரில் தெளிக்கும் உயிர்க்கொல்லிகள் இலை, பூ, காய், பழம் என அனைத்திலும் தங்கும் தன்மை கொண்டவை. அப்படிப்பார்த்தால், நாம் இவை எல்லாவற்றையுமே உண்கிறோம். மேலும் பயிர்களை கால்நடைகளுக்கும், தானியங்களை வளர்ப்புப் பறவைகளுக்கும் உணவாக கொடுக்கிறோம்.
சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்த நச்சுப் பொருட்கள் உடலில் சென்றால் கொழுப்பில் கலந்துவிடுமாம். பிறந்த குழந்தைக்கு தாய் பாலூட்டுகிறாள். தாய்ப்பால் உடலில் உள்ள கொழுப்பைக் கொண்டு உருவாகிறது. நாம் அருந்தும் மாடு எருமைப்பாலில் மீண்டும் அந்த நஞ்சு. அசைவ உணவுக்காக நாம் உண்ணும் ஆடு, கோழி, அதிலும் நஞ்சு.
சரி எனது குழந்தைக்கு மீன் கொடுக்கிறேன் என்று அதிபுத்திசாலிபோல் சிந்திக்கவேண்டாம். வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் நச்சுக்கொல்லிகள் நீரில் விழுந்து, வாய்கால் மற்றும் ஆறுகளில் கலப்பதால் மீனும் நஞ்சான உணவாகிறது. சற்றே சிந்தித்தால் நம்ம பிள்ளைகளுக்கு நாம் பாசமா நஞ்சூட்டி வளரக்கிறோம் என்பது தெளிவாகும்.
எத்தனை பூச்சி இனங்கள், புழுக்கள், பறவைகள், சிறு சிறு விலங்குகள் என்று அனைத்தும் மாண்டுபோயிருக்கும். அவைகளைக் கொன்ற பாவக்கணக்கைத் தீர்க்கவே நாமும் நஞ்சுண்டு நமது அடுத்த தலைமுறைக்கும் நஞ்சூட்டி வளர்க்கிறோமா என்ற கேள்வி எழுகிறது? உங்களுக்கு நேரமிருத்தால் கீழே உள்ள likeல் 33நிமிடங்களை செலவு செய்யுங்கள்.
https://youtu.be/PeLp_Zuhphk
நம்மாழ்வார் ஐயா தனது வாழ்வை அடுத்த தலைமுறைக்கு அடகு வைத்த அற்புத ஞானி. அவருக்கு நாம் கைமாறு செய்யவேண்டாம். நமது பிள்ளைகளின் எதிர்காலம் காக்க நமது பேராசையைக் குறைத்து வேதிப்பொருட்களையும் உயிர்க்கொல்லிகளையும் தவிர்த்தாலே போதும்.
இவை எல்லாம் உண்மைதானப்பா. அதை எப்படி மாற்றுவது என்று கேட்கத்தோனும் உங்களுக்கு. கண்டிப்பாக தோன்றவேண்டும். ஒரே வழி இயற்கை விவாசாயம் தான் தீர்வு. உங்களால் முடியவில்லை என்றால், இதை செய்யும் விவசாயிகளுக்கு நிலத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள். கூட்டுப் பண்ணையம் செய்யுங்கள். பணமா அல்லது எனது அடுத்த தலைமுறையின் உயிரா என்று உங்களுக்குள் கேள்வி கேளுங்கள். இறைவன் விடைதருவான்.
உலகம் நலம்பெறவேண்டும் இறைவா.
அன்புடன்
சி.நஞ்சப்பா
இயற்கை வேளாண் உழவர்

ReplyDeletehttps://youtu.be/4dB6B3WccKg
https://youtu.be/PeLp_Zuhphk